திருவண்ணாமலை மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியும் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியும் பணி நடைபெற்றது

Update: 2021-08-04 05:58 GMT

திருவண்ணாமலை மாவட்ட காசநோய் துணை இயக்குனர் அசோக்குமார் நேரடி மேற்பார்வையில் கலசப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட 11 கிராமங்களில் 10 ஆயிரம் பேருக்கு ஆரம்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காசநோய் அறிகுறி சந்தேகம் ஏற்பட்ட 81 பேரின் சளி மாதிரி பெறப்பட்டது இதில் 7 பேருக்கு மட்டும் காசநோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம சுகாதார பணியாளர்கள் மூலம் தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News