கலசப்பாக்கத்தில் புதிய மின் மாற்றியை துவக்கி வைத்த எம்எல்ஏ
கலசபாக்கத்தில் புதிய 63 கிலோ வாட் திறன் கொண்ட மின் மாற்றியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் புதிய 63 கிலோ வாட் திறன் கொண்ட மின் மாற்றி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் .மேலும் கலசப்பாக்கம் தொகுதியில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பரிசுகளை எம்எல்ஏ சரவணன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பரிசுகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சியில் புதிய 63 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ சரவணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், கலசப்பாக்கம் மக்கள் நீண்ட காலமாக எங்கள் பகுதியில் மின்சாரம் லோ வோல்டேஜ் ஆகவும், சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் துண்டிப்பு நிலையிலும் இருக்கிறது. அதனால் எங்களுக்கு எங்கள் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் பல விவசாய நிலங்களுக்கும் மின்சாரம் பற்றாக்குறையால் விவசாயம் செய்வதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் தேவையான மின்சாரம் சரியான முறையில் இல்லாததால் எங்களுக்கு ஒரு புதிய மின் மாற்றி தொடங்கி வையுங்கள் என என்னிடம் கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் கலசபாக்கத்தில் ரூபாய் 7 லட்சத்தில் 63 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு இப்பொழுது தொடங்கி வைத்துள்ளோம்.
இதன் மூலம் இப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு மின்சாரம் குறைந்த ஓல்டேஜ் விவசாயம் செய்வதற்கு மின்சாரம் பாதிப்பு ஏற்படாது.
இனிமேல் மின்சாரம் சரியான முறையில் கிடைக்கும் என எம் எல் ஏ கூறினார். இதுபோன்ற வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் அதிக அளவு நடைபெற்று வருகிறது என எம் எல் ஏ சரவணன் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர் ,மாவட்ட கவுன்சிலர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், மற்றும் மின்வாரிய அலுவலர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.