கலசபாக்கம் அருகே மிருகண்ட அணை திறப்பு
விவசாய பாசனத்திற்காக மிருகண்ட அணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று திறந்து வைத்தார்;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளது.கலசப்பாக்கம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்ட அணை தொடர் மழை காரணமாக மொத்த கொள்ளளவான 22.97 அடியில் இன்று மாலை நிலவரப்படி 20 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் விவசாய பாசனத்திற்காக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று அணையை திறந்து வைத்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்
தொடர்மழை நீடித்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. கலசப்பாக்கம் வட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 23 ஏரிகளும், ஊராட்சி கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும் என மொத்தம் 97 ஏரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி நேற்று இரவு முதல் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.