கலசப்பாக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலசப்பாக்கத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் துவக்கி வைத்தார்

Update: 2021-12-22 07:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , திட்ட இயக்குனர் சந்திரா , உதவி திட்ட இயக்குனர் ஜேம்ஸ் , வட்டார மேலாளர் சத்யராஜ் ,ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பிரமணியன்,  ஒன்றிய குழு தலைவர் அன்பரசி  உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News