ஜவ்வாதுமலையில் கோடை விழா; முன்னேற்பாடுகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு
ஜவ்வாதுமலையில் வரும் 30, 31ம் தேதிகளில் கோடை விழா நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார்.;
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் வரும் 30, 31ஆம் தேதி நடைபெற இருக்கிற கோடை விழா முன்னேற்பாடு பணிகளை சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி ஜவ்வாதுமலையில் வரும் 30, 31ம் தேதிகளில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவை காண திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், மாவட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் வந்து செல்வார்கள். இந்த கோடை விழாவில் பொழுது போக்கு அம்சங்கள், அரசின் திட்டங்கள், அரசு செய்த சாதனைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் செல்வது வழக்கம்.
இவ்விழா நடைபெறும் நிலையில் ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள கோலப்பன் ஏரியில் மக்கள் படகு சவாரி செய்வார்கள். சுற்று சூழல் பூங்காவை பார்வையிட்டு செல்வார்கள், பீமன் நீர் வீழ்ச்சியில் குளித்து விட்டு மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.
எம்எல்ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும் கோடை விழா முன்னேற்பாடு பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , ஆய்வு செய்து பேசியதாவது :-
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் கோடை விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற வேண்டும், கோடை விழா நடைபெறும் இரண்டு நாட்களும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். 5000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளது. அதனால் கோடை விழாவை கண்டுகளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் அரசு அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் என ஏராளமான மக்கள் வருவார்கள் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் அனைத்தும் தரமாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் கோடை விழா நேரத்தில் மக்களுக்கு மொபைல் டாய்லெட் வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் தரமாக அமைத்துக் கொடுக்க வேண்டும். மக்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
சுமார் 5000 மேற்பட்ட மக்கள் அமரும் வகையில் பரமமாண்டமாக பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டார். தற்போது மழைக்காலம் என்பதால் பந்தல் வலுவாக அமைக்க வேண்டும் அதேபோல் நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சரவணன் எம்எல்ஏ தெரிவித்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், தாசில்தார் வெங்கடேசன், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.