புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றியை துவக்கி வைத்த எம்எல்ஏ
புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ துவக்கி வைத்தார்.;
கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றியைதொடங்கி வைத்து பேசியதாவது,
மஷார் ஊராட்சி மக்கள் நான் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது என்னிடம் எங்கள் பகுதியில் சரியான முறையில் மின் வசதி கிடைக்காததால் எங்களுக்கு புதிய மின் மற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் 100 கிலோ வாட் கொண்ட புதிய மின்மாற்றியை கொடுத்து இப்பொழுது அந்த மின் மற்றி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு மின்சாரம் துண்டிக்காமல் சரியான முறையில் வழங்கப்படும். இதேபோல் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படும் என்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சங்கரன், உதவி செயற்பொறியளர் மூர்த்தி, உதவி பொறியாளர்கள் சுரேஷ், சிவசங்கர், மாவட்ட பிரதிநிதி முருகன், துணைத் தலைவர் தாரணி கருணாநிதி, கிளை செயலாளர் புருஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், கிளை செயலாளர்கள், மின்சார துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.