கலசப்பாக்கம் மசூதியில் சிறுபான்மை நலதுறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

கலசபாக்கம் பகுதியில் உள்ள மசூதியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.;

Update: 2022-07-17 02:08 GMT

இஸ்லாமிய மக்களிடையே குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார் அமைச்சர் மஸ்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள மசூதியில் இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களிடையே குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார் அதைத்தொடர்ந்து, காந்தபாளையம், வீரளூர், கீழ்பாலூர், கடலாடி, எர்ணமங்கலம், மோட்டூர், கலசபாக்கம் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது மசூதியை அரசாங்கத்தில் சரியான முறையில் பதிவு செய்து உள்ளீர்களா? மேலும் அரசு வழங்கும் திட்டங்கள் வருகிறதா? இல்லையென்றால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

ஆய்வின்போது கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News