மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
கலசபாக்கம் வட்டம் சோழவரம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.;
கலசபாக்கம் அருகே சோழவரம் கிராமத்திலுள்ள திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அளவீடுகள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ADIP திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
உடன் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் , மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.