தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
கலசபாக்கம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கலசபாக்கம் அருகே கீழ்பாலூர் கிராமத்தில் துரை என்பவர் அவரது தேனீர் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவர் மீது கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மொத்தம் ரூபாய் 23400 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.