புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு எம்எல்ஏ ஆய்வு..!
கலசப்பாக்கத்தில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு எம்எல்ஏ ஆய்வு செய்தார்;
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் காரப்பட்டு முதல் மட்டவெட்டு வரை கல்லாறு குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்து விரைவில் மேம்பாலம் அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொ குதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் காரப்பட்டு முதல் மட்டவெட்டு வரை கல்லாறு குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்து பேசியதாவது;
காரப்பட்டு முதல் மட்டவெட்டு வரை உள்ள தரைப்பாலம் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலம். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் காற்றாற்று வெள்ளத்தில் பாலம் ஒரு பக்கம் உடைந்து அடித்து செல்லப்பட்டது. அதில் தான் மக்கள் இக்கரையில் இருந்து அக்கறை சென்று வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த தரைப்பாலம் வழியாகத்தான் செல்கிறார்கள். அதனால் அப்பகுதி மக்கள் என்னிடம் புதிய ஏற்பட்ட பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டி என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கு நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் மூலம் 4 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு பெற்று அதன் ப்ரோபோசல் கிடைத்தவுடன் விரைவில் உயர்மட்டம் பாலம் அமைக்கப்படும் அதுவரை இக்கரையில் இருந்து அக்கர செல்வதற்கு மக்களுக்கு மாற்றுப்பாதை அமைத்து அதன் மூலம் மக்கள் சுலபமான முறையில் செல்லலாம் .
மேலும் இந்த பகுதியில் உள்ள காரப்பட்டு, மட்டவெட்டு, கீழ்குப்பம், மேல்குப்பம், அத்திமுரமன்கொட்டை, ராமசாமிபுரம், மற்றும் பல கிராமங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். அதனால் விரைவில் பாலம் அமைத்துக் கொடுக்கப்படும் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், நிர்மலா, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.