கலசப்பாக்கத்தில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ஆதமங்கலம் புதூரில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூரில் சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு ரத்ததானம் முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கியும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகள் பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி தங்கள் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தனிநபர் சுகாதாரம் காக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், எம்எல்ஏ, எம்பி ஆகியோர் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறோம் எங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செல்வகுமார், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மலர்கொடி, கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.