கலசபாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு பணிகள் துவக்கம்

கலசபாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது;

Update: 2024-02-27 06:50 GMT

பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் புதுப்பாளையம் ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்து பேசியதாவது;

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக மக்களுக்காக பல நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தார். பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தார்.

அவரது வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்காக பல சலுகைகளை திட்டங்களை வழங்கி வருகிறார். அதில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் பெண்களுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

நமக்காக பல சலுகைகளை வழங்கிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்த நூற்றாண்டு விழா நாளில் நினைவு வளையத்தை இப்பொழுது நாம் இங்கு தொடங்கி வைத்துள்ளோம் என எம் எல் ஏ சரவணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News