கலசப்பாக்கம்- பெங்களூர் புதிய பேருந்து சேவை துவக்கம்

கலசப்பாக்கம் முதல் பெங்களூர் செல்வதற்கு புதிய பேருந்தை எம்எல்ஏ, எம்பி துவக்கி வைத்தனர்.

Update: 2024-03-14 02:09 GMT

புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து, துவக்கி வைத்த அண்ணாதுரை எம்பி, சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் முதல் பெங்களூர் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து அரசு பேருந்து தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் எதிரில் கலசப்பாக்கம் முதல் பெங்களூர் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலசப்பாக்கம் முதல் பெங்களூர் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது;

கலசப்பாக்கத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டுமென்றால் சுமார் 35 கிலோமீட்டர் திருவண்ணாமலை சென்று தான் பெங்களூர் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது, இல்லையென்றால் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள செங்கம் சென்று தான் பெங்களூரு செல்வதற்கு பேருந்து வசதிகள் தற்போது உள்ளது.

அதனால் எங்களுக்கு கலசபாக்கத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு புதிய பேருந்து வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கை ஏற்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும், போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடமும் கூறி கலசப்பாக்கம் பகுதியில் இருந்து பெங்களூர் செல்வதற்கு போளூர் வழியாக புதிய வழித்தடம் பேருந்து அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நானும் உங்கள் சட்டமன்ற உறுப்பினரும் கேட்டுக் கொண்டோம்.

அதன் அடிப்படையில் புதிய பேருந்து வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தப் பேருந்து இரவு எட்டு முப்பது மணிக்கு தொடங்கி போளூரில் இருந்து கலசப்பாக்கம் வழியாக வில்வாரணி, தென் மகாதேவமங்கலம், கடலாடி, புதுப்பாளையம், செங்கம், ஊத்தங்கரை வழியாக பெங்களூரு செல்கிறது.

இந்த பேருந்து மூலம் இந்த கலசப்பாக்கம் பகுதியில் உள்ள தென் மகாதேவ மங்கலம் , வில்வாரணி, அருணகிரி மங்கலம், கடலாடி, புதுப்பாளையம், செங்கம் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பெங்களூர் செல்வதற்கு சுலபமாக இருக்கும் என அண்ணாதுரை எம்பி பேசினார்.

நிகழ்ச்சியில் தொமுச பேரவை மண்டல செயலாளர் சௌந்தர்ராஜன், மண்டல பொது மேலாளர் செந்தில், மண்டல பொது துணை மேலாளர் கலைச்செல்வன், ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போக்குவரத்து கிளை மேலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,மாவட்ட கவுன்சிலர்கள், கலசப்பாக்கம் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News