கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கலசப்பாக்கம் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்செய்தார்

Update: 2021-03-15 18:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் பன்னீர்செல்வம். மீண்டும் அதிமுக சார்பில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை கழகம் வேட்பாளராக அறிவித்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனிடம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வேட்புமனுவை வழங்கினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News