திமுக ஆட்சியிலேயே ஜவ்வாதுமலை பெரும் வளா்ச்சியை கண்டுள்ளது : அமைச்சா் எ.வ.வேலு..!

திமுக ஆட்சியிலேயே ஜவ்வாதுமலை பெரும் வளா்ச்சியை கண்டுள்ளது, கோடை விழாவை தொடங்கி வைத்து அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.;

Update: 2024-08-31 05:08 GMT

கோடை விழாவில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 24-ஆவது ஆண்டு கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட நிா்வாகமும், தமிழக சுற்றுலாத் துறையும் இணைந்து நடத்தும் இந்த விழா, ஜமுனாமரத்தூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராம்பிரதீபன் வரவேற்றாா்.

சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன், பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கோடை விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கோடை விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;

ஜவ்வாதுமலைமலைவாழ் மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்காகவும் மலைவாழ் மக்களுக்கு அரசு சார்ந்த திட்டங்கள் அனைத்தும் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

ஜவ்வாதுமலை 24 வது கோடை விழாவில் சுற்றுலாத்துறை மூலம் பல சலுகைகளை இந்த ஜவ்வாதுமலைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரின் கடைக்கண் தி றந் து திருவ ண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த ஜவ்வாதுமலைக்கு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் நிதியாண்டில் திருவ ண்ணாமலை மாவட்டத்திற்கும் ஜவ்வாதுமலைக்கு ம் நினைவில் வைத்துக் கண்டு நிதி ஒதுக்கீடு செய்யும்பொழுது திருவ ண்ணாமலை மாவட்டத்தையும் ஜவ்வாதுமலையு ம் அதில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் சுற்றுலாத்துறை மூலம் நீங்கள் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

திமுக ஆட்சியில்தான் ஜவ்வாதுமலைக்கு முதல்முதலில் மின்சாரம், பிஎஸ்என்எல் கோபுரம் அமைக்கப்பட்டது. தற்போது ஜவ்வாதுமலைவாழ் மகளிரும் விடியல் பயணம் மூலம் பயன்பெறும் வகையில் மகளிா் இலவசப் பேருந்துகள் தொடங்கப்படுகிறது. திமுக ஆட்சியிலேயே ஜவ்வாதுமலை பெரும் வளா்ச்சியை கண்டுள்ளது.

ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்களுக்கு இலவச பேருந்து பயணம் விடியல் பயணம் அமைத்து கொடுப்பதற்கு பெரிய பேருந்து வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு சாலைகள் விரிவு படுத்த வேண்டும். 77 கிலோ மீட்டர் தூரம் சாலை விரிவு படுத்த வேண்டும். இந்த சாலையில் 887 சிறுபாலங்கள் மூன்று பெரிய பாலங்கள் 47 வளைவுகள் ஆகியவை ரூ 225 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளவேண்டும். விரைவில் அதன் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்படும். சாலைகள் விரிவுபடுத்தி பெரிய பேருந்தின் மூலம் விடியல் பயணம் செய்வதற்கு உண்டான பணியை செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பல்வேறு துறைகள் சாா்பில் 7202 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை அமைச்சா்கள் எ.வ.வேலு, கா.ராமச்சந்திரன் ஆகியோா் வழங்கினா்

கிராமிய நாட்டிய நிகழ்ச்சிகள்... விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டுப்புறப் பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நாடகங்கள், சரித்திர புராண நாடகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மலா் கண்காட்சி இல்லை... ஒவ்வொரு ஆண்டும் கோடை விழாவின்போது, திருவண்ணாமலை மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு மலா் கண்காட்சி நடத்தப்படவில்லை.

இவ்விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் , மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஒன்றிய குழு தலைவர்கள் ஒன்றிய செயலாளர் வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News