ஜவ்வாது மலை கோடை விழா ஆலோசனைக் கூட்டம்

ஜவ்வாது மலை கோடை விழா ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

Update: 2024-07-06 03:16 GMT

கோடை விழா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

ஜவ்வாது மலை கோடை விழா ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் 24வது கோடை விழா விரைவில் நடைபெற இருப்பதால் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் 24வது கோடை விழா திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி, தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடைபெற இருக்கும் 24 வது கோடை விழாவை நடைபெற உள்ளதை யொட்டி , முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது ஆட்சியர் பேசியதாவது,

ஊரக வளர்ச்சி முகமை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விழா மேடை, அலங்காரங்கள், ஒளிபரப்பு போன்ற வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். காவல்துறை மூலம் பாதுகாப்பு வசதி, நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

வருவாய்த்துறை மூலம் இருப்பிடம், உணவு, வசதி, கலை நிகழ்ச்சி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். வனத்துறை மூலம் விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்கள் பரிசுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் நடன பயிற்சி, பாரம்பரிய கலை விழா, பள்ளி மாணவர்கள் மூலம் மலைவாழ்மக்களின் பாரம்பரிய நடனம் போன்ற சிறப்பம்சங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். போக்குவரத்து துறை மூலம் அரசு வாகனங்களில் கோடை விழா குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டவேண்டும். அதேபோன்று கோடைவிழா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். மின்சார வாரியம் சார்பில் விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம். தீயணைப்பு துறை சார்பாக ஏரி மற்றும் விழா நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்கவேண்டும். நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜவ்வாது மலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தரவேண்டும், அதேபோன்று சுகாதாராத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து தரவேண்டும். அதேபோன்று கடந்த ஆண்டு போலவே தோட்டக்கலை சார்பில் காய்கறிகள் மற்றும் மலர்கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதேபோல் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகள் அலுவலக மேலாளர் பரமேஸ்வரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜுலு , அண்ணாமலை, நிர்மலா, லட்சுமி, மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மணிகண்டன் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News