வனத்துறையினர் சார்பாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
ஜமுனாமரத்தூர் வனச்சரகம் சார்பாக கோமுட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டி கிராமத்தில் வன அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
நாளை நடைபெற உள்ள மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வனக்காப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.