பர்வத மலைக்கு புதிய சூரிய மின் விளக்குகள் பொருத்தும் பணி துவக்கம்

கலசப்பாக்கம் அடுத்த பர்வத மலைக்கு புதிய சூரிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-02 02:28 GMT

சூரிய மின் விளக்குகளை வழங்கிய அண்ணாதுரை எம்பி மற்றும் சரவணன் எம்எல்ஏ.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி பர்வத மலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவர். மேலும் அம்மாவாசை பௌர்ணமி தினங்கள் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பருவதமலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை 20 சூரிய மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியது.

சூரிய மின்விளக்குகள் பொருத்தும் பணியினை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகிய துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர், ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய பேருந்து சேவை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் முதல் போளூர் வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய பேருந்து வசதியை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகிய செய்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அண்ணாதுரை எம்பி பேசுகையில், அய்யம்பாளையம் பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு வரும் அரசு பேருந்தை நிறுத்திவிட்டனர். அதனால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்திலும், நடைபயணமாகவும் நடந்து வந்து பள்ளிகளுக்கும், கடைவீதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கும், செல்ல வேண்டி உள்ளது. அதனால் எங்களுக்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததின் பேரில் அய்யம்பாளையம் முதல் போளூர் வரை பொதுமக்கள் செல்வதற்காக புதிய அரசு பேருந்தை தற்போது தொடங்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் , மாவட்ட பேரவை செயலாளர்கள், கூட்டமைப்பு தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News