கலசப்பாக்கத்தில் புதிய உயர்மட்ட பாலம் திறப்பு
கலசப்பாக்கத்தில் இரண்டு கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தை எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்.;
கலசபாக்கம் அடுத்த எர்ணமங்கலம் முதல் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களை இணைக்கும் வகையில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 2.41 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலத்தை அண்ணாதுரை, எம்பி, சரவணன், எம்எல்ஏ திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எர்ணமங்கலம் முதல் மேல் வில்வராயநல்லூர் கிராமங்களை இணைக்கும் வகையில் மிருகண்டா ஆற்றின் குறுக்கே பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 2.41 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலத்தை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அண்ணாதுரை எம்.பி, புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்து பேசியதாவது,
இந்த எர்ணமங்கலம் முதல் மேல் வில்வராயநல்லூர் கிராமங்கள் இணைக்கும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடமும், என்னிடமும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யவந்த போது கோரிக்கைவைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 2.41 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதன் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு சென்ற ஆண்டு பூமியில் செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பணிகளை விரைந்து முடித்து இப்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எர்ணமங்கலம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதேபோல் மேல் வில்வராயநல்லூர் பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆகிய கிராம மக்கள் இந்த பாலத்தின் மூலம் பயன்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் இக்கரையில் இருந்து அக்கறை செல்வதற்கு சுமார் 10 கிலோமீட்டருக்கு மேல் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த பாலத்தின் மூலம் உடனடியாக இக்கரையில் இருந்து அக்கறை செல்வதற்கு ஒரு சுலபமான வழியை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அண்ணாதுரை, எம்.பி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், இன்ஜினியர் சௌந்தராஜன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, கிளைச் செயலாளர் செந்தில், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர் துணை தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.