கலசப்பாக்கம் அருகே அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்ற தொடக்க விழா

புதுப்பாளையம் மற்றும் வேட்டவலத்தில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.;

Update: 2024-07-06 02:32 GMT

வேட்டவலம் அரசு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கியம் மன்ற துவக்க விழா நடைபெற்றது.

பள்ளித்தலைமை ஆசிரியர் கிருபானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி தமிழ் ஆசிரியர் காயத்ரி முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் கிருபானந்தம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குத்துவிளக்கு ஏற்றி கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய மன்றத்தை  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் சான்றிதழ்களும் வழங்கினார். 

மேலும் 10-ம் வகுப்பு மாணவி தேவி மற்றும் அர்ச்சனா ஆகியோர் நன்றி கூறினார்கள். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள். ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார் .

ஆசிரியை மேரி முன்னிலை வழித்தார். எட்டாம் வகுப்பு மாணவி ரம்யா அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் முருகன் ஆங்கில இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆங்கில ஆசிரியை மணிமேகலை மன்றத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்.

விழாவில் 6,7,8 வகுப்பு மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் பாடல்கள் பாடுதல் , செய்தித்தாள் வாசித்தல், நகைச்சுவை துணுக்குகள், தேசத் தலைவர்கள் குறித்த உரையினை ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்கள். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள். ஆசிரியர்கள். பெற்றோர்கள் .பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News