விவசாயிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது
கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி செயலாளர் , ஒன்றியக்குழு தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.