அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது;

Update: 2021-07-24 16:14 GMT

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு மேற்கொண்டார். இலவச மருத்துவ முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்

அருமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News