கோவில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா: காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த முதல்வர்

கலசபாக்கம், செய்யாறு பகுதிகளில் புதிய திட்டங்களை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-30 13:16 GMT

விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி உரையாற்றினார், உடன் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்.

புதுப்பாளையம் உள்வட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதூர் செங்கம் கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை விழா நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ, புதுப்பாளையம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன், பரம்பரை கோவில் அறங்காவலர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கட்ராமன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர், செங்கம் தாசில்தார், முனுசாமி புதுபாளையம் வருவாய் ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், செங்கம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் கடைகள் கட்ட பூமி பூஜை:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வளாகத்தில் 6 வணிக கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூமி பூஜை செய்தனர். பூஜையில் ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் பாபு, ராஜி, திலகவதி, ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ஞானவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கங்காதரன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News