Farmers Grievance Day Meet தலையில் கரும்பு கட்டுடன் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி
Farmers Grievance Day Meet விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தலையில் கரும்பு கட்டுடன் விவசாயி பங்கேற்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Farmers Grievance Day Meet
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாகவும் நேரிடையாகவும் தெரிவித்து வந்தனர்.
அப்போது திடீரென்று கலசப்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்துடன் தலையில் கரும்பை சுமந்து கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது..
பின்னர் அவர் கூறுகையில்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தில் தான் வசித்து வருவதாகவும் தன் பெயர் முனியப்பன் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது சொந்த நிலத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரை விளைவித்துள்ளார். தற்போது கரும்பை வெட்டி எடுத்து சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் விவசாயி முனியப்பன் ஈடுபட்டு வருகிறார். இதில் முதற் கட்டமாக 10 டன் அளவிற்கு கரும்பை வெட்டி எடுத்து சக்கரை ஆலைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது முனியப்பன் நிலத்தை சுற்றி உள்ள விவசாயிகள் அவரது நிலத்திற்கு வாகனம் செல்ல வழி விடாமல் தடுத்துள்ளனர்.
இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய தீர்வு ஏற்படாத நிலையில் ஆரணி கோட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதி விவசாயிகள் இது கோவில் நிலம் கோவில் நிலத்தை பட்டா செய்ய முனியப்பன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு கோயில் நிலத்தின் வழியாக விவசாயிகள் முனியப்பனுக்கு வழி விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் வெட்டப்பட்ட பத்து டன் கரும்பு சுமார் 30 நாட்களுக்கு மேலாக சக்கர ஆலைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் காய்ந்து வருவதாக விவசாயி முனியப்பன் குற்றம் சாட்டினார்
இந்த விவசாய குறைதீர் கூட்டத்தில் முனியப்பன் தனது குடும்பத்துடன் தலையில் கரும்பை தலையில் சுமந்து தனக்கான நியாயம் வழங்க கோரி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட முனியப்பன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை கூடுதல் ஆட்சியர் ரிஷப் அழைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் விவசாய கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.