கலசபாக்கம் அருகே மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது; சுகாதாரத்துறை அதிரடி
திருவண்ணாமலை அருகே போலி மருத்துவம் பார்த்த ஒருவரை சுகாதாரத்துறையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த கோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 50). பி.ஏ.பட்டதாரியான இவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் அதே பகுதியில் அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் மருத்துவத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் வீட்டில் சிகிச்சைக்காக மருந்துகள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். பினனர், போலியாக மருத்துவம் பார்த்த சங்கரை கலசபாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த கலசபாக்கம் போலீசார், சங்கரை செய்து கைது செய்தனர்.
இதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள தனியார் மருந்துக்கடையில் போலியாக மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமையிலான மருத்துவ குழுவினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தலைமைறைவாகியதாக கூறப்படுகிறது.