கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் முக்கியத்துவம்: கலசப்பாக்கம் எம்எல்ஏ
கட்சிப் பாகுபாடின்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் கூறினார்;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் சார்பாக பேசிய எழில்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரும் கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சரவணன், உரையாற்றும்போது, தானும் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி உள்ளேன், எனக்கும் உங்களுடைய கஷ்டங்கள் தெரியும். கட்சி பாகுபாடு இன்றி அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.