கலசப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்

புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட் எம்எல்ஏ வழங்கினார்.;

Update: 2024-10-13 02:40 GMT

திமுக புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கிய சரவணன் எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் எம்.எல்.ஏ பங்கேற்று புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கினர்.

விழாவிலா் சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது :

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் , கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த தி.மு.க.-வை மேலும் வலிமைப்படுத்திட ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க " உடன் பிறப்புகளாய் இணைவோம் " என்ற மாபெரும் முன்னெடுப்பு ததொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 4 தேதி புதிய உறுப்பினர் சேர்க்கை சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக அ ள வி ல் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டிருந்தார் அதன்படி கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் மேற்கு ஒன் றியத்தில் புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதிய உறுப்பினர்களுக்கான உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

திமுக பவள விழா கொண்டாடும் இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் அது உறுதி. அதற்காக நாம் அனைவரும் இப்பொழுது முதல் பாடுபட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சுதாகர், காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் , புதுப்பட்டு ரமேஷ்,  ஒன்றிய துணைச் செயலாளர்கள், திமுக அணி அமைப்பாளர்கள் ,திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ,மூத்த முன்னோடிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர் பொதுமக்கள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News