ஜவ்வாதுமலை நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூரில் கூட்டுறவு கடை, பழங்குடியினர் மாணவிகள் விடுதி மற்றும் மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்படும் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஜமுனாமரத்தூரில் கூட்டுறவு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொ து ம க்க ளு க் கு வழங்கப்படும் அரிசி, பருப்பின் தரம், பொருட்களின் இருப்பு, செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் என்.எம்.எஸ்.ஐ தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடத்தப்படும் பழங்குடியினர் மாணவிகள் தங்கும் விடுதியில் தற்போது 125 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவிகள் தங்கும் விடுதியில் கட்டிடத்தின் தற்போதைய நிலை, சமையலறை மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் மேலும் தேவைப்படும் வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜமுனாமரத்தூரில் மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்படும் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பார்வையிட்டார் . மேலும் பழங்குடியினர் உழவர்களிடமி ரு ந்து கொள்முதல் செய்யப்படும் தேன், புளி,சாமை மற்றும் மிளகு ஆகிய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் விவரம் மற்றும் விலை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ர மணியன் , மகளிர் திட்ட இயக்குநர் சரண்யாதேவி, ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், தாசில்தார் மனோகரன், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.