ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா: கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராம் தலைமையில் மருத்துவ குழுவினர், கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர்.
அதன் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, இன்று வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் கொண்டு அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.