ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு பயிற்சி

ஜவ்வாதுமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-05-18 06:57 GMT

பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பயிற்சி கூடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமையும், மாவட்ட நிர்வாகம் இணைந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பு செய்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். உதவி செயற் பொறியாளர் சரவணன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் குழு தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள், விவசாய உற்பத்தி கூட்டமைப்பு தலைவர்கள், உற்பத்தியாளர்கள் குழு சமூக வல பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News