கலசப்பாக்கத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

கலசப்பாக்கத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.;

Update: 2023-10-06 01:56 GMT

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கிய அண்ணாதுரை எம்பி

கலசபாக்கம் தாலுகாவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய தலைவர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 9 வகையான சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி,  ஏழை எளிய மக்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வசதி இல்லாமல் இருப்பதால் அவர்களுக்காக தமிழக அரசு மூலம் ஒன்பது வகையான சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சியை தமிழக அரசே எடுத்து நடத்தி வருகிறது.

கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்துடன் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும். நமது குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என அண்ணாதுரை கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சேத்துப்பட்டு வட்டாரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார் . சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி ,துணைத்தலைவர் கமலக்கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் வளைகாப்பு செய்து வாழ்த்தினார் .அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு, தாம்பூலம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News