வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையொட்டி பெய்த மழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்;
கலசபாக்கம் அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், நல்லான் பிள்ளை பெற்றான் கிராமத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் கலெக்டர் முருகேஷ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு. பிரதாப், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா. வட்டாட்சியர்கள், ஒன்றிய குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன், வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.