கலசபாக்கத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கலசபாக்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-13 01:03 GMT

கலசப்பாக்கம் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்,   அவர்கள்  பார்வையிட்டு அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் இருந்து,  பூண்டி செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை ஆட்சியர் முருகேஷ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர், கலசபாக்கம் மெயின் ரோட்டில் இருந்து, பஜார் வீதியில் செல்லும் போது, அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை, சாலை போடுவதற்கு முன்பே அதிகாரிகள் அகற்றிவிட்டு சாலை பணி தொடங்கி இருக்க வேண்டும். கல்வெட்டு கட்டப்பட்டு வரும் இடத்தில்,  கல்வெட்டின் நீளம், அகலம் பெரிதாகவும், கால்வாயின் அகலம் குறுகியும் உள்ளதை பார்த்து தாசில்தாரை அழைத்து கால்வாயின் அகலம் குறித்து கேள்வி எழுப்பினார். 

அப்போது 9 மீட்டர் அகலம் கால்வாய் உள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 1½ மீட்டர் அகலம் மட்டுமே இருந்தால் எப்படி தண்ணீர் செல்லும் எந்த பக்கத்தில் பார்த்தாலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த கால்வாயின் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுங்கள் என்று வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கலசபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, குடும்பநல இணை இயக்குனர் அன்பரசி, கலசப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் சவுத்ரி, செவிலியர்கள், வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News