ஜவ்வாது மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ஜவ்வாது மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினார்.
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலையில் மக்களுடன் முதல்வர் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பயனளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி, தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கேசவன், ஒன்றிய குழு துணைதலைவர் மகேஸ்வரி செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வ ளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயனளிகளுக்கு நலத்த உதவிகளையும் வழங்கி பேசியதாவது
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மக்கள் தங்களின் உடல்நிலை பாதுகாத்துக் கொள்வதற்கு மருத்துவமனைகளை தேடி சென்று அலைய வேண்டாம் என்பதற்காக கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அந்த முகாமின் மூலம் ஏழை எளிய மக்கள் சுலபமான முறையில் அவரவர்கள் பகுதியில் சிகிச்சை பெற்று பலனடையெல்லாம் என்பதற்காக இந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துக் கொடுத்தார், அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று எளிய முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, உப்பின் அளவு, சிறுநீரில் உப்பின் அளவு, மார்பக புற்றுநோய், கண் புரை, கண் பரிசோதனையில் சிகிச்சைபெற்று ஏராளமான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து முகாமில் ஏழை எளிய மக்கள் பயன்படுவதற்காக மக்கள் யாரும் அலுவலகங்களை தேடி செல்ல வேண்டாம் அதிகாரிகள் அனைவரும் மக்களை தேடி சென்று மக்களின் குறைகளை போக்க வேண்டும் என்பதற்காக இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பதிவு செய்து தங்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் அப்படி இல்லையென்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் இந்த முகாமில் மலைவாழ் மக்கள் பயன்பெற வேண்டும்
இந்த முகாமின் மூலம் 15 துறை அதிகாரிகள் மூலம் 44 சேவை மையங்களை அமைத்து மக்கள் கொடுக்கும் மனுக்களை பதிவு செய்து அவர்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் இந்த முகாமில் பட்டா மாறுதல் பட்டா திருத்தம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கல் புதிய குடும்ப அட்டை பெறுதல் மின்சார துறை மூலம் பெறுவதற்கு மனு கொடுத்தல் தமிழக அரசின் மூலம் மத்திய அரசின் மூலமும் வழங்கப்படும் வீடு பெறுவதற்கு உண்டான மனுக்கள் கொடுத்தல் போன்ற பல்வேறு நடத்திட்ட உதவிகள் பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்படுகிறது. அதன் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சரவணன் எம்எல்ஏ கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் , மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.