கலசப்பாக்கத்தில் ரேஷன் கடை, திறந்தவெளி கிணறு அமைக்க பூமி பூஜை
கலசபாக்கத்தில் ரேஷன் கடை மற்றும் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து மதிமங்கலத்தில் புதிய திறந்தவெளி கிணறு ரூ 17.60 லட்சத்தில் கிணறு அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து மதிமங்கலத்தில் புதிய திறந்தவெளி கிணறு ரூ 17.60 லட்சத்தில் கிணறு அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய து ணைச் செயலாளர் குப்பன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ, பேசியதாவது
கடலாடி பகுதியில் ரேஷன் கடை மிகவும் தொலைதூரத்தில் உள்ளதால் மக்கள்தொலைதூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க முடியவில்லை அதனால் எங்களுக்கு புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடலாடி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி புதிய பகுதிநேர ரேஷன் கடை அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து அதன் மூலம் தற்காலிக கட்டிடத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக மாதிமங்கலத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது மக்கள் அனைவரும் எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது , அதனால் எங்களுக்கு புதிய திறந்தவெளி கிணறு வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ 17.60 லட்சத்தில் புதிய திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய திறந்தவெளிக்கு அமைப்பதற்கு இப்பொழுது பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அத்தியாவசியமான குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது இந்த கிணற்றின் மூலம் மக்கள் தாகத்தை தணிப்பதற்கு இந்த கிணற்று மூலம் போதுமான குடிநீர் வசதி அமைத்துக் கொடுக்கப்படும் என்று சரவணன் எம்எல்ஏ கூறினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் தணிகைமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அறங்காவலர் குழு தலைவர் ராமன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.