கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குநர்
கலசபாக்கம் ஒன்றியம், லாடவரம் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.;
வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.
பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர், ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.