ஜவ்வாது மலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு
ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேரடி ஆய்வு செய்தார்.;
புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணியினை ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேரடியாக ஆய்வு செய்தார்/
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேரடி ஆய்வு செய்தார்.
முன்னதாக ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , உதவியாளர்கள் ,பணி மேற்பார்வையாளர் ,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆய்வு கூட்டத்தை நடத்தி அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டகரை ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி மூலம் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் உலர் களம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி பராமரித்திட அறிவுறுத்தினார்.
கோவிலூர் ஊராட்சியில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய திறந்தவெளிக் கிணறு ,மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு நிலுவைப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
மேலும் அதே கிராமத்தில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியின பயனாளிகளுக்கான புதிய குடியிருப்பு வீட்டினை பார்வையிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ் ,சக்திவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட இதர அலுவலர்கள் உடனிருந்தனர்.