படவேடு ரேணுகாம்பாள்‌ கோவிலில்‌ உதவி ஆணையர்‌ ஆய்வு

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த உதவி ஆணையர்‌, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-01-24 13:15 GMT

படவேடு ரேணுகாம்பாள்‌ கோவிலில்‌ உதவி ஆணையர்‌ ஆய்வு செய்தார்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுபெறும் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 6 ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவில் முழுவதும் சீரமைத்து வர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கோவிலின் செயல் அலுவலர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் உதவி ஆணையர் ராமு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மேலும் ரேணுகாம்பாள் கோவிலின் முடி காணிக்கை மண்டபம், உபகோயிலான காளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது கோவியில் மேலாளர் மகாதேவன், என்ஜினியர் செந்தில்குமார், எழுத்தர் ரவி ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News