கலசப்பாக்கம் ஒன்றிய அங்கன்வாடி மையத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

Update: 2024-02-24 02:23 GMT

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், பள்ளி கட்டிடங்களையும், அங்கன்வாடி மையங்களையும் கூடுதல் ஆட்சியர் ரிஷப் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது; கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள லாடாவரம், பத்தியவாடி, ஆனை வாடி ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து இந்த வளர்ச்சி பணிகள் அங்கன்வாடி மையங்கள், மேல்நீர் தேக்க தொட்டிகள், தார் சாலைகள், சிறிய சமுதாய கழிவறை ,பள்ளி கட்டிடம், பேவர் பிளாக் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ததில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் சுமார் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

மேலும் உள்ள 25 சதவீத பணிகள் விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தரமாக அமைக்கப்பட்டு வருகிறது இன்னும் வளர்ச்சி பணிகளை தரமாக அமைக்க வேண்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் காலதாமதம் செய்யாமல் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும். ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகள் வேண்டுமென்றால் கோரிக்கை தீர்மானத்தில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்து உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வளர்ச்சியான ஊராட்சியாக மாற்ற வேண்டும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பத்தியவாடி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வரும் பணியினை கடப்பாரையால் குத்தி பேவர் பிளாக் கல்லை ஆய்வு செய்து தரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் லாராவரம் பகுதியில் உள்ள பள்ளி கட்டிட பணிகளை ஆய்வு செய்தபோது பள்ளியில் உள்ள மாணவர்கள் எந்த அளவிற்கு படிக்கிறார்கள் அவர்களது கல்வி திறன் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்ய மாணவர்களை எழுப்பி கரும்பலகையில் எழுதியுள்ள ஆங்கில வார்த்தைகளை படிக்க கூறினார். அப்போது மாணவர்கள் பயப்படாமல் ஆர்வத்துடன் சிறப்பான முறையில் படித்ததால் மாணவர்களை கூடுதல் ஆட்சியர் பாராட்டினார்.

மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாக உள்ளது எனக் கூறி மாணவர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் கூடுதல் ஆட்சியர் ரிஷப் பாராட்டினார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், அண்ணாமலை, பஞ்சாயத்து தலைவர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News