பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனjd;
கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ( 28 ) இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஆயர்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் பூவரசி (22) பி.எஸ்.சி பட்டதாரி முடித்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.ஜெயக்குமார் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் தனது வீட்டில் பூவரசியுடன் இருந்து வந்துள்ளார். நேற்று குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. மாலையில் பூவரசி வீட்டில் உள்ள அறையில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கில் நிலையில் பூவரசி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பூவரசியை மீட்டபோது அவர் இறந்தது தெரியவந்தது. குறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பூவரசின் தந்தை ஆறுமுகம் எனது மகள் வரதட்சணை கொடுமையால் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என இன்று காலை கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்து ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு தான் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட முடியும் என சமரசம் செய்து வைத்தனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.