வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

திருவண்ணாமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-01-09 10:47 GMT

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. அங்கு மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், வனச்சரக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட 15 பேர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மல்லவாடி அருகே உள்ள சொர கொளத்தூர் காப்புக்காடு பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். பிடிப்பட்டவர்கள் கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சுமன், தானலாம் பாடியை சேர்ந்த விஜய் என்று தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வனப்பகுதிக்கு ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News