100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கால் பந்து விளையாடிய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2024-04-05 01:53 GMT

முதல் தலைமுறை வாக்காளர் மாணவிகளுடன் கால் பந்து விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி

திருவண்ணாமலை நகராட்சி, காந்திநகர் பைபாஸ் சாலை மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் விளையாட்டு மாணவ, மாணவியர்களின் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் வில்வாரணி நட்சத்திர கோவில் வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்திய வரைபடம், அதனை சுற்றி அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகைகள் ஏங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கால் பந்து விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் செழியன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர் மாணவர்களுக்கு அவர்களுடன் கால்பந்து விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் , பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News