செங்கம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

செங்கம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தும் முகாம்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-07-23 04:37 GMT

பைல் படம்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. பற்றாக்குறை  காரணமாக பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ( முதல் மற்றும் இரண்டாம் தவணை ) கீழ்காணும் பகுதிகளில் போடப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன் பெற சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், அரட்டவாடி, இளங்குண்ணி, பரமனந்தல், மேல்பென்னாத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நீப்பத்துறை, காயம்பட்டு, தோப்பூர்,  பிஞ்சுர், பாய்ச்சல், அரட்டவாடி ஆகிய முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும். கோவேக்ஷின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டும் இன்று காலை மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News