தள்ளுவண்டி கடைகள் மாற்றம்

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தள்ளுவண்டி கடைகள் பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றம் செய்யப்படுள்ளது.;

Update: 2021-05-19 06:09 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டுவந்த தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களின் கூட்டம் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் காணப் பட்டது. இதனால் அதிகாரிகள் அங்கிருந்த கடைகளை செங்கம் பேருந்து நிலையத்தில் இயங்க அனுமதித்து உத்தரவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் குறைந்தது. மேலும் செங்கம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கும் வகையில் வட்டம் வரையப்பட்டு நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News