Tirupur Subramaniam- திருப்பூர் சுப்பிரமணியம், திடீர் ராஜினாமா; சிறப்பு காட்சிகள் புகார் எதிரொலி
Tirupur Subramaniam- தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.;
Tirupur Subramaniam, sudden resignation, Special Show, Complaint- தமிழ்நாடு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம், தனது தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகளை திரையிட்ட விவகாரத்தில், அவரது தியேட்டர் நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அளித்தது. இந்த பிரச்னையை அடுத்த, அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
தமிழ்நாடு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சுப்ரமணியம். இவருக்கு சொந்தமான தியேட்டர்கள் திருப்பூரில் உள்ளது. இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், காலையில் 9 மணிக்கு முன்னதாக 4 காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் திருப்பூரில் இன்று சுப்பிரமணியம் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட தியேட்டர் உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன். எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, என்றார்.
திருப்பூர் சுப்ரமணியம் மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மட்டுமின்றி விநியோகஸ்தர், தயாரிப்பாளராகவும் இருந்தவர். சினிமா பைனான்ஸியராகவும் செயல்பட்டவர். இந்நிலையில், அவர் எடுத்த இந்த திடீர் முடிவு தமிழ் சினிமா சார்ந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.