துணை மருத்துவ படிப்புகள்; மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Tirupur News. Tirupur News Today- துணை மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-12 12:06 GMT

Tirupur News. Tirupur News Today- துணை மருத்துவ படிப்புகளில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.(கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டாக்டர் கனவு வாய்க்குமா, வாய்க்காதா என்ற குழப்பத்தோடு இருக்கும் மாணவர்களுக்கு, குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை துணை மருத்துவ படிப்புகள் வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கிடைக்கவில்லை என்றாலும் துணை மருத்துவப் படிப்புகள் மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைய காத்திருக்கிறது. அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதிமருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல்வேறுதுணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில் பி.பார்ம்., (4 ஆண்டு), பி.எஸ்.சி., (நர்சிங்) (3ஆண்டுகள்), பி.பி.டி., (பிஸியோதெரபி) (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப், பி.ஏ.எஸ்.எல்.பி., (4ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியோதெரபி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., கார்டியோ (3 ஆண்டுகள்), பி.ஓ.டி., அக்குபேஷனல் தெரபி (4 ஆண்டுகள்) உள்ளிட்ட படிப்புகள் உள்ளது. பி.எஸ்.சி., (நர்சிங்) படிக்க 2021 டிசம்பர் நிலவரப்படி 17 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31, 2021 நிலவரப்படி 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள பிரிவை எடுத்து படித்து 40 சதவீதம் மதிப்பெண் பெற்று ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., படிப்புகளுக்கு பிளஸ் 2- வில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாக குறைந்தது 40 சதவீதமும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பிற படிப்புகளுக்கு பிளஸ் 2 -வில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருப்பதே தகுதி.மாணவர்கள் விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 104 என்ற பெயரில் எடுக்கப்பட்ட 400 ரூபாய்க்கான வரைவோலையையும் இணைத்து நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News