தடுப்பூசியால் தான் தொற்றில் இருந்து தப்பலாம் - திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் என்று, திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி பேசினார்.

Update: 2021-05-31 12:32 GMT

கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான வேளாண்மை உற்பத்தி ஆணையாளர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளபப்ட்டு வருகிறது. பொது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அறிவுரைகளை ஏற்று, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள், அப்பகுதியில் உள்ள ஆலோசனை மையங்களில் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். 100 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும்.

இதன் மூலம் நோய் முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனைகள் வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்கள், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 121 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்திலும் முழுமையாக நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி நோய் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்து கொள்ள வேண்டும், என்றார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் கலெக்டர் விஜய்கார்த்தியேகன், நகர ஊரமைப்பு இயக்குனர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News