திருப்பூர் மாநகராட்சி காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருப்பூர் மாநகராட்சியில், பல்வேறு காரணங்களால் நிரப்பப்படாமல் உள்ள 273 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2021-06-11 05:31 GMT

திருப்பூர், மாநகராட்சியாக கடந்த 2008 ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஆயிரத்து 226 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தற்போது 273 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகவே உள்ளன.

மாநகராட்சி சார்பில் 1074 பணியிடங்கள் நிரப்பி கொள்ள அனுமதிகேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில்,408 பணியிடங்களை நிரப்பி கொள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார். எனினும் அவை நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகளில் தாமதம் அல்லது பணிச்சுமை உண்டாகிறது. 

இது குறித்து, திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சியில்  தற்போது 273 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகவே உள்ளன. குறிப்பாக, உதவி கமிஷனர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள்  நிரப்பப்படவில்லை.

கொரோனா தொற்று காரணமாக பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்ட தடை, கடந்த ஆண்டு  அக்டோபர் மாதமே விலக்கி கொள்ளப்பட்டது. அதன்படி நகராட்சி நிர்வாக ஆணையர் அனுமதித்த 408 மற்றும் காலியாக உள்ள  273 பணியிடங்களை நிரப்ப உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மாநகராட்சியில் நடைபெற்று வரும் அம்ரூத், ஸ்மார்ட்சிட்டி திட்டம் ஆகிய திட்டப்பணிகளை கண்காணிக்க,  இரண்டு செயற்பொறியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News