திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 728; பலி எண்ணிக்கை 4...
திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், இன்று 728 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 4 பேர் பலியாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் அதிகளவில் இருந்தது. இதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைள் ஒருபுறம், தடுப்பூசி போடும் பணி மறுபுறம் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது கோவேக்சின் 5,100 டோசும். கோவிஷீட்டு 11,500 டோசும் மாவட்டம் முழுவதும் போடப்பட்டு வருகிறது.
இதன் பலனாக, மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 726 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 62 ஆயிரத்து717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு, 646 பேர் இறந்து உள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டம் முழுவதும், 12 ஆயிரத்து 738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.