திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலாவை கண்டித்து தீர்மானம்

சசிகலாவை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்டஅதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2021-06-20 14:22 GMT

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சசிகலா, தற்போதுஅதிமுக.,வினரிடையே தொலைபேசி வாயிலாக பேசி விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்து வருகிறார். அவருடன் பேசிய அதிமுக., உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து அதிமுக., வில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த முயற்சி செய்து வரும் சசிகலாவை கண்டிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News